உலகமெங்கும் கொரோனா வைரஸ் பல அலைகளை ஏற்படுத்தி சற்று ஓயிந்து வரும் நிலையில், புதிதாக வைரஸ்கள் கிளம்பியுள்ளன. ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடு அடைந்த இரண்டு புதிய வகை மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதாகும்.
சீனாவின் பல மாகாணங்களில் இந்த இரண்டு வீரியம் மிக்க வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஷாவோகுவான் மற்றும் யாண்டாய் நகரங்களில் பிஎப்.7 வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தின் ஷாகுவான் நகரில் பிஏ.5.1.7 கண்டறியப்பட்டுள்ளது.
பிஎப்.7 வகை மாறுபாடு உலகமெங்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸின் பிஎப்.7 வகை மாறுபாடு இங்கிலாந்து,ஜெர்மனி, பெல்ஜியம், , பிரான்ஸ், டென்மார்க் மற்றும் ஆகிய நாடுகளில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.