Mnadu News

சீனாவில் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி!

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன் கிடைத்தபோதும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. இதனால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதும்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதம் உயர்ந்து வருகிறது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் சீன மக்கள் தொகை குறைந்தது. கடந்த ஆண்டிலும் (2023) மக்கள் தொகை 2 மில்லியன் அளவுக்கு குறைந்தது. சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளதாகவும் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இரண்டாவது ஆண்டாக இறப்பு விகிதம் உயர்ந்து, பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால், மொத்த மக்கள் தொகையில் 2 மில்லியன் குறைந்ததாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More