உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா தொற்று தற்போது வரை அதே நிலையில் தொடர்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆம், இன்னும் இன்னும் அதிக கொரோனா தொற்றுகள் பதிவாகி உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, சீனாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 9,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் உள்ளூர் நகரங்களில் 10,729 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9,520 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,68,753 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.