Mnadu News

சீன கம்யூனிஸ்ட் மாநாட்டிலிருந்து முன்னாள் அதிபர் வெளியேற்றம்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு கடந்த 16 ஆம் தேதி; துவங்கியது. ஒருவாரத்துக்கு நடக்கும் இந்த மாநாட்டில், சீன அதிபராக ஷி ஜின்பிங் 3 வது முறையாக தொடர்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மாநாட்டின் கடைசி நாளான இன்று, அரங்கில் அதிபர் ஷி ஜின்பிங் அருகில் 79 வயதான முன்னாள் அதிபர் ஹ_ ஜின்டாவோ அமர்ந்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதற்கான காரணம் தெரியவில்லை.
ஜிண்டாவோ வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் அருகில் அமர்ந்திருந்த ஷி ஜின்பிங்கிடம் சில கருத்துகளை கூறினார். ஆனால் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. இந்த காட்சிகளை படம் பிடித்து கொண்டிருந்த வீடியோவிலும் அது பதிவாகவில்லை. முன்னாள் அதிபர் ஹ_ ஜிண்டாவோ வெளியேற்றப்பட்ட நிலையில், ஜின்பிங் அருகில் அமர்ந்திருந்த பிரதமர் லி கெகியாங், இறுகிய முகத்துடன் காணப்பட்டார். முன்னாள் அதிபர் வெளியேற்றப்பட்டது குறித்து எந்த முகபாவனையையும் காட்டாதவாறு கெகியாங் அமர்ந்திருந்தார்.

Share this post with your friends