முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் எருக்கூர் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமன். இவரது 5 வயதான மகள் அக்ஷிதா நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ,உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More