தேவையான பொருட்கள்:
அவித்த சுண்டல் : 1 கப்
அரிசி மாவு : 1 கப்
கடலை மாவு : 1 கப்
நறுக்கிய வெங்காயம் : 1 கப்
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சை மிளகாய் , பெருங்காயம் எண்ணெய் தேவையான அளவை எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
வேகவைத்த சுண்டலுடன் அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். பக்கோடா போடுவது போல் உதிரியாக மாவை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்தால் சூடான சுவையான சுண்டல் பக்கோடா ரெடி.
மருத்துவப் பயன்கள்:
மாரடைப்பு காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்கிறது. கர்ப்பிணிகளுக்குத் தேவையான அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. குளுக்கோஸை அதிகரிப்பதால் சர்க்கரை நோய்க்கு உகந்ததாக இருக்கும். இரத்தசோகை, வயிறு சார்ந்த பிரச்சினைகள், போன்ற பிரச்சினைகளுக்கு கொண்டக்கடலை சிறந்தது. ஒரு நாளுக்குத் தேவையான கலோரிகளில் 30 சதவீதத்தை கொண்டக்கடலை தருகிறது.
சத்துக்கள்: அதிக புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், செலோனியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம்.