Mnadu News

சுதா கொங்காரவின் கனவு படத்தில் கைகோர்க்கும் இரண்டெழுத்து பிரபல நடிகர்!

மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு மிகவும் பிசி நாயகனாக கலை துறையில் உலா வருகிறார். இப்படம் இவருக்கு பெற்று தந்த வெற்றி இவரின் சம்பளத்தை உயர்த்தி இவரை மீண்டும் புகழ் வெளிச்சத்தில் அமர வைத்துள்ளது.

அதே போல அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் கெளதம் மேனன், சிம்பு, இஷரி கணேஷ் மூவருக்கும் முக்கியமான படமாக அமைந்தது.

பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்பு அதன் பின் சுதா கொங்காரா உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுதாவின் கனவு படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கே ஜி ஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends