சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ஆம் தேதி முதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ஆயிரத்து 90 ரூபாய், சிறியவர்களுக்கு 545 ரூபாய் கட்டணம் ஆகும். இந்த அதிநவீன மிதவை சொகுசு பஸ் சேவை ஜனவரி மாதம் 18- ஆம்; தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் றறற.வளெவஉ.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு 575 ரூபாயும், சிறியவர்களுக்கு 288 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More