Mnadu News

சுற்றுலா பயணிகள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும்.

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர், சமோலி மாவட்டம் சென்று பத்ரிநாத் கோயிலிலும் மோடி பூஜை செய்தார். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ,மணா கிராமம், இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்பட்டது. ஆனால், இனிமேல், எல்லை பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும். கேதார்நாத், பத்ரிநாத்தில் உள்ளதை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். கேதார்நாத்தில் கடவுள் சிவனின் ஆசி பெற்றேன். கேதார்நாத்தில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டம் யாத்ரீகர்களின் பயண நேரத்தை குறைக்கும். கவுரிகுண்ட் முதல் கேதர்நாத் வரையிலும், கோவிந்த் கட் முதல் ஹேம்குண்ட் சாஹிப் வரையிலுமான ரோப்கார் திட்டம் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். முந்தைய அரசுகள் தங்கள் சுயநலத்திற்காக பணியாற்றின. இந்தியாவானது, அடிமை மனநிலையில் சிக்கி தவித்தது. முந்தைய அரசுகளும் , இந்தியாவை அடிமை தனத்தில் சிக்க வைத்தன. பா.ஜ., ஆட்சியில் அடிமை மனநிலையில் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு பொருட்களை வாங்க 5 சதவீதம் செலவழிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். என்று மோடி பேசினார்.

Share this post with your friends