திகார் சிறையில் பல முக்கிய குற்றவாளிகள் தண்டனை பெற்று வருகின்றனர். எனினும் கடந்த சில நாள்களாக கைதிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலைக்கும்பல் தலைவன் டில்லு தாஜ்புரியாவை புதிய சிறை அறைக்கு மாற்றியதை அறிந்துகொண்ட கொலையாளிகள் திட்டமிட்டு, சிறையிலேயே அவரைக் கொன்றுள்ளனர்.இந்நிலையில், செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிறை வளாகம் முழுவதும் தடுப்புச் சுவரிலிருந்து வலை கட்டப்பட்டுள்ளது. வெளியிலிருந்து கைதிகளின் அறை இருக்கும் இடத்தினருகே செல்போன்கள் வீசப்படுவதால், காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More