Mnadu News

சூடானில்தொடரும் பதற்றம்! பொதுமக்கள் வெளியேறும் அவலம்!

கடந்த 2021 அக்டோபர் மாதம் 25 ஆம்  தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது சூடான் நாட்டில். இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ள நிலையில், தற்போது ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், போர் நடந்து 100 வது நாளை எட்டிய நிலையில், சூடான் விமான நிலையத்தில், ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது.

இதில் 4 ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நேற்று தர்பர் பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த போரால், பல ஆயிரக்கணக்கான அப்பகுதி வாசிகள் எல்லையை கடந்து வேறு பகுதிகளுக்கு அலறியடித்து ஓட்டம் பிடித்து வருகின்றனர்.

Share this post with your friends