Mnadu News

சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை உறுதி.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை உயிருடன் மீட்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்தது.அதே சமயம், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சில திட்டங்கள் உள்ளன. ஆனால் நிலைமையை பொறுத்தே முடிவு செய்யப்படும்.அதே நேரம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதோடு,,நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.அங்கு தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.தற்சமயம், சூடானில் உள்ள இந்திய தூதரக கட்டடத்திற்குள் இப்போது யாரும் இல்லை.இருப்பினும், இந்தியத் தூதரகம் அதிகாரிகள் தனித்தனி இடங்களில் இருந்து, அங்குள்ள இந்தியர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறார்கள். தற்போது நியூயார்க்கில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூடான் நெருக்கடி குறித்து பேச ஐ.நா பொதுச் செயலாளரை சந்திப்பார்.என்று கூறியுள்ளார்.

Share this post with your friends