சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ள செய்தியில், சூடானில் சிக்கி தவித்து வரும் நமது மக்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இந்த சூழலில் சூடான் துறைமுகத்திற்கு 500 இந்தியர்கள் வரை வந்து சேர்ந்து விட்டனர். இன்னும் பலர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்தியாவுக்கு திரும்பி வர அழைத்து வருவதற்காக நம்முடைய கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. நமது சகோதரர்கள் அனைவருக்கும் உதவிபுரிய உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More