Mnadu News

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்.

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.இதனிடையே, துணை ராணுவப் படையை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி; முயற்சி மேற்கொண்டார்.இதனால்,ஆத்திரமடைந்த ராணுவத்தினர் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. இந்த மோதலால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் உயிரிழப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, ராணுவம் – துணை ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் சூடானில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மோதல் நீடித்து வருவதால் சூடானில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends