Mnadu News

சூரத்தில் இன்றுடன் கோலாகலமாக நிறைவு பெறும் தேசிய விளையாட்டு போட்டி!

குஜராத்தில் உள்ள அகமதாபாத், ராஜ்கோட், சூரத் உள்ளிட்ட ஆறு நகரங்களில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற டிரையத்லான் போட்டியின் கலப்பு தொடர் பிரிவில் தமிழக அணி 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தன்வசம் ஆக்கியது. இதில் குஜராத் அணி வெள்ளியும், மணிப்பூர் அணி வெண்கலமும் வென்றன.

அதே போன்று யோகாசன போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவு மூன்றாவது இடத்தை பெற்றது.
பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் அணி 121 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாடு 73 பதக்கங்களை பெற்று 5 வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. சூரத்தில் கோலாகலமாக நிறைவு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends