Mnadu News

சூரியா 42 குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு!

“அண்ணாத்த” பட பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சூரியா சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் சூரியா 42. பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசை அமைத்து வருகின்றார்.

3டி படமாக உருவாகி வரும் இது பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. சென்ற மாதம் பூஜை போடப்பட்டு படம் துவங்கிய நிலையில், தற்போது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது என படாக்குழு அறிவித்து உள்ளது. சரித்திர படமாக உருவாகி வரும் இப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Share this post with your friends