Mnadu News

செங்கோட்டை தாக்குதல் வழக்கு: ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி.

கடந்த 2000 ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் பழமை வாய்ந்த செங்கோட்டை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப். என்கிற அஷ்பக் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு இவர்களில் முகமது ஆரிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த 2005 ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை 2007ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து ஆரிஃப் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த மனு கடந்த 2011இல் தள்ளுபடியானது. பின்னர், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து முகமது ஆரிஃப் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி முகமது ஆரிஃப் தாக்கல் செய்த சீராய்வு மனு தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் முகமது ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this post with your friends