சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செயப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை – திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரக்கூடிய வாகனங்கள், பட்டுலாஸ் சாலை- ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திரும்பி செல்ல வேண்டும்.
அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்பட்டுள்ளது.