மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையின் தென் பகுதியில் அடர்ந்த மேகங்கள் வரிசையாக நிற்கின்றன. இன்று காலை தென் சென்னையில் கனமழை பெய்தது. அதோடு, ஒரு கனமழைக்கு தென் சென்னைக்கு வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கரூக் திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மிக அதிக கனமழை அல்லது அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மயிலாடுதுறை அல்லது கடலூர் மாவட்டத்தை சுற்றி மேகக் கூட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அடுத்த இரு தினங்களுக்கு காற்றில் உள்ள ஈரப்பதத்தால் மழை பெய்யும். அதிலும் அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும். இன்று தென் சென்னையில் தீவிர மழை பெய்தது. வரும் 14 ஆம் தேதி வரை விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More