தமிழகத்தில் வருகின்ற 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பணிகளுக்கு செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்
இந்நிலையில், எழும்பூர், மாம்பலம், பெரம்பூர், புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், அயனாவரம், தாம்பரம், திருப்போரூர், வண்டலூர், மாதாவரம், பொன்னேறி, அம்பத்தூர், பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மேலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More