Mnadu News

சென்னையில் முதல்முறையாக நடைபெற்ற இரவு மாரத்தான் போட்டி

போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் இரவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தமிழகத்தில் போதையில்லா தமிழகம் என்பதை முன்னிறுத்தி பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தனியார் அமைப்புடன் இணைந்து இந்த மாரத்தான் போட்டியானது ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை தமிழக காவல்துறை DGP சைலேந்திர பாபு பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த இரவு மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரா, ஒரிசா,ராஜஸ்தான், உத்திரபிரேசம்,அந்தமான் & நிகோபார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஆண்கள்,பெண்கள் என 3500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 21கிலோமீட்டர், 10கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் என்ற மூன்று பிரிவுகளில் பங்கேற்று ஓடினர்.

முன்னதாக வீரர்கள் வந்து செல்ல ஆவடி ரயில் நிலையம் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.இந்த இரவு மாரத்தான் போட்டி வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்றது.இதற்காக ஒரு வழி பாதையாக மாற்ற பற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடைபெற்ற இரவு மாரத்தான் போட்டியானது சென்னையில் முதல்முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிட தக்கது.

Share this post with your friends