Mnadu News

சென்னையில் 6 இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம், தாம்பரம் சானடோரியம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த மூன்று நாள்களில் பிற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 370 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதுபோல சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்கு வரும் 25 முதல்;. 27 வரை மூன்று நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அரசுப் பேருந்துகளில் பயணிக்க சென்னை கோயம்பேட்டில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் ஒரு மையமும் என 11 மையங்கள் வரும் இன்று முதல் 23-ஆம் தேதி வரை செயல்படும். அதோடு;, முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம.;
அரசுப் பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் இயக்கம் குறித்தும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அதே சமயம்;, தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 – 2474 9002, 044 – 2628 0445, 044 – 2628 1611 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Share this post with your friends