வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ட்பிளேர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவை 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக போர்ட் விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ட் பிளேரில் உள்ள வீர சவார்க்கர் விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே உள்ளது. இதனால், போர்ட் பிளேருக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கும் அந்தமானில் இருந்து கொல்கத்தா,விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More