Mnadu News

மதுரவாயல் ஈரடுக்கு சாலை: கிராபிக்ஸ் படங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு 4 வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மேம்பாலச் சாலை சிவானந்தா சாலையில் தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை மேத்தாநகர்,அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயிலை அடையும்.இந்த இரண்டடுக்கு உயர் நிலை சாலையின் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்கள் செல்லும் வகையில், 13 இடங்களில் ஏறி, இறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன. மேல் அடுக்கில் துறைமுகத்தின் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.இந்நிலையில், சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு 4 வழிச்சாலை குறித்த கிராபிக்ஸ் படங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.அதோடு, இந்த திட்டம் முடிவடைந்தால், துறைமுகத்தின் கையாளும் திறன் இரட்டிப்பாகும் என்றும், துறைமுகம் செல்லும் வாகனங்களின் பயண நேரம் ஒரு மணி நேர அளவிற்கு குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this post with your friends