ஜெயம் ரவி :
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, சரியான கதைகளை, ரோல்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. வெற்றி, தோல்வி என பாரமால் தொடர்ச்சியாக படங்களை தேர்வு செய்து கலக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி திரை வாழ்வில் இன்னும் ஒரு பெரிய அத்தியாயத்தை துவக்கி வைத்துள்ளது.
ரீலீசுக்கு காத்திருக்கும் படங்கள் :
சைரன், இறைவன், ஜன கண மன, ஜெயம் ரவி 30 (இயக்குநர் – ராஜேஷ்), ஜெயம் ரவி 31( மிஷ்கின் AD), ஜெயம் ரவி 32 ( கிருத்திகா உதயநிதி) இப்படி கிட்டதட்ட ஆறு படங்களில் கமிட் ஆகி உள்ளார் ஜெயம் ரவி. இதில் மூன்று படங்கள் முடியும் நிலையில் உள்ளன.
எகிறிய சம்பளம் :
பொன்னியின் செல்வன் படம் கொடுத்த பிளாக் பஸ்டர் வெற்றி, ஜெயம் ரவியின் கேரியர் ஐ புரட்டி போட்டு உள்ளது எனலாம். ஆம், தற்போது அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் ₹30 கோடி என கூறப்படுகிறது.
தனி ஒருவன் 2 அறிவிப்பு :
2014 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “தனி ஒருவன்” படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதன் பார்ட் 2 எப்போது வரும் என பலரும் கேட்டு வந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு சூட்டிங் துவங்க உள்ளதாக படக்குழு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்ட முறையில் தயாரிக்க உள்ளது குறிப்பிடதக்கது. மேலும், இந்த முறை தனி ஒருவன் பார்ட் 2 வுக்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
பிறந்த நாள் பரிசு :
வரும் செப்டம்பர் 10 அன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெயம் ரவி அவர்களுக்கு, ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைலை வெளியிட போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அவர் நடித்து வரும் பல படங்களின் குழுக்களும் இது போன்று சர்ப்ரைஸ் தர தயாராகி வருகின்றனர்.