வட கிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், இன்று மாலை 3 மணிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயின் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More