Mnadu News

செலவைக் குறைக்காவிட்டால் ட்விட்டர் திவாலாகும்: எலான் மஸ்க் எச்சரிக்கை.

அண்மையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். ட்விட்டரை விலைக்கு வாங்கியது முதலே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டார். டிவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை குறைத்தது, போலிக் கணக்குகளைக் கண்டறிய ட்விட்டர் பயனர்களுக்கு மாதக் கட்டணம் செலுத்த வேண்டும் போன்றன அந்த அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இந்த சூழலில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பிறகு முதல் முறையாக நேற்று அதன் ஊழியர்களிடத்தில் எலான் மஸ்க் பேசினார். அப்போது, செலவு குறைப்பு நடவடிக்கையாக 50 சதவிகித ட்விட்டர் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ட்விட்டர் ஊழியர்கள் இனி வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். வீடுகளில் இருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும். அலுவலகம் வந்து பணிபுரிய தயாராக இல்லாத ஊழியர்கள் வேலையை ராஜிநாமா செய்து விடலாம். செலவைக் குறைத்து வருவாயைப் பெருக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனம் திவாலாகும் என்றார்.

Share this post with your friends