ஆவடி அடுத்த திருநின்றவூரை சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் 17 வயது மகன் மோனிஷ். திருமுல்லைவாயில் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மோனிஷ் ,கல்லூரிக்கு செல்போன் எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை கவனித்த கல்லூரி நிர்வாகத்தினர் கடந்த வியாழக்கிழமை அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். பெற்றோரை அழைத்து வந்து விளக்கம் அளித்துவிட்டு செல்போனை பெற்றுக் கொள்ளுமாறு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவன் மோனிஷ், தனது செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு கல்லூரி நிர்வாகத்திடம் சென்று செல்போனை திரும்பத் தருமாறு கேட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோனிஷ் கல்லூரியில் இருந்து மன உளைச்சலுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது ஆவடி ரயில் நிலையம் சென்று அங்கு திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி எக்ஸ்பிரஸ் முன்பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மாணவரின் உடலை கைப்பற்றிய ஆவடி ரயில்வே போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்