சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இந்த நிலையில் இவரது வீட்டில் இன்று அதிகாலை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த மாணிக்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி, மற்றும் பிறந்து பத்து நாள் ஆன பச்சிளங்குழந்தை உட்பட ஏழுபேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்து குறித்து சேலம் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More