இந்திய துணை கண்டமே பார்த்திறாத வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என சேலத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு தமிழக முதல்வர் பேசியுள்ளார்.
சேலம் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வரும் அதிமுக கழக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் 10 மணிக்கு முன்னதாக நல்ல நேரம் எனபதால் கூட்டத்தை பேசி ஆரம்பித்ததாகவும், இந்திய துணை கண்டமே பார்த்திறாத வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது எனவும் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சரவணனை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாஐக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.