ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் தற்போது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தெலங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாகக் கூட நினைத்துக்கொள்ளலாம் என விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசி உள்ள தெலங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ், சொந்த நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் கூட வெற்றி பெற முடியாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதல் அமைச்சர்; கேசிஆரின் தேசிய கட்சியின் லட்சியத்தை கிண்டல் செய்கிறார். பிரதமராக விரும்புவதற்கு முன்பு முதலில் எம்.பி.யாக தேர்வு செய்ய மக்களை சமாதானப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More