“வாரிசு” படத்தில் நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்கும் நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறு கலக்கத்தில் உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பொங்கல் பண்டிகைக்கு “வாரிசு” படம் மட்டும் தான் வெளியாவதாக இருந்த நிலையில், அஜித்தின் துணிவு வெளியாக உள்ளதாக கிடைத்த தகவல் அவரை சோகத்தில் மூழ்க வைத்து உள்ளது.

இதையெல்லாம் தாண்டி விஜய் படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாவதால் அந்த பொங்கல் நாளில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் படங்கள், மலையாள நடிகர்களின் படங்களும் வெளியாவதால் வசூல் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

அவர் போட்ட ஸ்கெட்ச் வாரிசு படம் மூலம் சுமார் 500 கோடிகளையாவது அள்ளிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது துண்டு விழுந்துள்ளது.