சிவசேனை அணிகள் விவகாரத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்; தவறு செய்துவிட்டார், அதே சமயம், உத்தவ் தக்ரே தானாக முன்வந்து ராஜினாமா செய்ததால், பழைய அரசை மீண்டும் பதவியில் அமர்த்த நீதிமன்றத்தால் முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள மகாராஷ்டிர துணை முதல் அமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், உச்சநீதிமன்றத்தின் கருத்து ,ஜனநாயகத்திற்கும்,ஜனநாயக செயல்முறைக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.அதோடு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் முழுமையாக திருப்தி அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More