ஜப்பானில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் (இந்திய நேரப்படி மதியம் 1.39) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும், கடுமையான நில அதிர்வை உணர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More