பல தசாப்தங்களுக்கு பிறகு காஷ்மீரில் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி தேர்தல் நடைபெற இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, ஜம்மு காஷ்மீர் விரைவில் மாநில அந்தஸ்தை மீண்டும் பெறும். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.பல தசாப்தங்களுக்கு பிறகு காஷ்மீரில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் முதல்முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. வளர்ச்சி அடைந்ததோடு நம்பிக்கை அதிகரித்து விட்டது. மக்கள் தங்கள் கனவுகளை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உடன் நிச்சயம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும்” என்றார்.