Mnadu News

ஜல்லிக்கட்டு அனுமதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான நமது பிரதமர் மோடிக்கு, தமிழக பாஜக மற்றும் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நமது பிரதமர் மோடி, அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இந்த சூழலில்,கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம், தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. அதையடுத்து, நிதி அமைச்சர் நிர்மா சீதாராமன், கோரிக்கையை ஏற்று 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,தமிழக அரசால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.ஆனால், காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர். இருப்பினும்;,காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது பிரதமர் மட்டும் தான். என்று கூறியுள்ளார்.

Share this post with your friends