ஜவான்:
வெற்றி இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் “ஜவான்”. மாபெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் முக்கிய ரோல்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஜவான்” படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல T-Series நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியானது.
டிரெய்லர் வெளியீடு :
சில நாட்களாகவே டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், மிரளும் வைக்கும் டிரெய்லரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டைன்மெண்ட் வெளியிட்டு உள்ளது. அனிருத் ரவிச்சந்திரன் இசையில் மாஸ் ராப் பின்னணி பாடலோடு ஷாருக் கான் அதகளம் செய்துள்ளார் என்றே சொல்ல முடிகிறது. இப்படம் செப்டம்பர் 7 அன்று உலகமெங்கும் பான் இந்தியா படமாக வெளியாகிறது.