ஜவான்:
₹220 கோடி பட்ஜெட்டில், பிளாக் பஸ்டர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் “ஜவான்”. இந்த திரைப்படத்தில் முக்கிய ரோல்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.
கதை சர்ச்சை :
இதற்கிடையில் ஜவான் படம் உருவாகி வந்த போதே இது விஜயகாந்த் நடிப்பில் வந்த பேரரசு படத்தின் கதை தான் என ஓயாத சர்ச்சைகள் வட்டமடிக்க. அது ஒரு புறம் தீயாய் பரவி, நடிகர் ஷாருக் கானை எரிச்சல் அடைய செய்தது.
இசை உரிமை:
செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல T-Series நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் இருந்தே “ஜவான்” படப் பணிகளை அட்லீ துவங்கிய நிலையில், சென்ற வருடமே இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரி புரொடக்ஷன் பணிகளில் நேரம் இழுக்கவே இந்த வருடம் செப்டம்பரில் திரைக்கு வருகிறது.