Mnadu News

“ஜவான்” குறித்து ஷாருக்கான் போட்ட ட்வீட்! வைரல்!

தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அண்மையில் ரூ.15 கோடி செலவில் ஷாருக்கான் அறிமுகமாகும் ‘வந்த இடம்’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.

படம் வெளியாக சரியாக ஒரு மாதம் இருக்கும் இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். முழுவதும் மொட்டை அடித்து போஸ் கொடுத்திருக்கும் ஷாருக்கான் அந்த பதிவில் ‘நான் நல்லவனா? கெட்டவனா?.. 30 நாட்களில் தெரிந்துவிடும்… ஜவான் படம் உலகம் முழுவதும் 7 செப்டம்பர் 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends