Mnadu News

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் மனுத் தாக்கல்.

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.கடந்த 2015-16 ஆண்டுகளில் டெல்லி அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரலில், சத்யேந்தர் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடர்புடைய 4 கோடியே 81 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.இதனிடையே சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Share this post with your friends