தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 0 புள்ளி 88 ஏக்கர் பரப்பு கல்குவாரியை தன் பெயரில் குத்தகைக்கு எடுத்ததாக அந்த மாநில முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் மீது ஜார்க்கண்ட் முன்னாள் முதல் அமைச்சரும் பாஜக தலைவருமான ரகுபர்தாஸ் குற்றஞ்சாட்டினார். அதுதொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜார்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதற்கிடையே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வந்த ஹேமந்த், அதில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் இரண்டாவது முறையாக வரும்; 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து, ஒருநாள் முன்னதாக ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என ஹேமந்த் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.
முன்னதாக, கடந்த 3ஆம் தேதி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகி ஹேமந்த் சோரன் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More