பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையிலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் நவம்பர் 15-ஆம் தேதி ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய குடியரசுத் தலைவர் முர்முவை ஜார்க்கண்ட் ஆளுநர் ராமேஷ் பாய்ஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பிர்சா முண்டாவின் கிராமமான உலிஹாட்டுக்குச் சென்றார். அங்கு அவர் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் அவருடன் இணைந்தனர்.
முர்மு பதவியேற்ற பிறகு முதன்முறையாக மாநிலத்திற்கு வருகை தரும் நிலையில், கிராம மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முர்மு.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More