Mnadu News

ஜாவா தீவில் ‘காப்பான்’ படப்பிடிப்பு

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் படம் ‘காப்பான்’. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவிற்கு படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இந்த தீவில் உள்ள அழகிய பகுதிகளில் இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளது. மேலும் ஜாவா தீவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் கே.வி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி திரைக்கு வரும் ‘காப்பான்’ படத்தில் சூர்யாவுடன், மோகன்லால்,சாயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, உள்ளிட்ட பல முன்னணி நதிச்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Share this post with your friends