Mnadu News

ஜிகிர்தண்டா 2 குறித்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்! 

ஜிகிர்தண்டா: 

2014 ஆம் ஆண்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரிய அளவில் புரொமோஷன் இல்லாமல் வந்த இந்தியாவையே திரும்பி விரும்பி பார்க்க வைத்த படம் என்றால் அது “ஜிகிர்தண்டா” என்ற ஒன்றை தான் சொல்ல வேண்டும். ஆம், கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் அறிமுக படமே அவருக்கும் அவரது குழுவுக்கும் பற்பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது. பாபி சிம்ஹா, சித்தார்த், லக்ஷ்மி மேனன், நாசர், டெல்லி கணேஷ், ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், விஜய் சேதுபதி, கருணாகரன் போன்ற நட்சத்திர பட்டாள நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பல விருதுகளை பெற்று அனைவருக்குமே ஒரு முக்கியமான படமாக அமைந்தது. 

கார்த்திக் சுப்புராஜ்: 

தொடர்ச்சியாக இவரின் கதை சொல்லும் பாணி தனித்துவமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், ஜிகிர்தண்டா படத்தை தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, பென்குயின், மஹான் படங்களை கூறலாம். இவருக்கு என்று ஒரு தனி திரை மொழியை கையாண்டு கதை கூறி வருகிறார். குறிப்பாக இவரின் திரை பயணத்தில் மாபெரும் மைல்கல்லாக அமைந்தது ரஜினி பட வாய்ப்பு. ஆம், பேட்ட படம் விமர்சனம், வசூல் என இரண்டிலும் பாஸிட்டிவ் விமர்சனங்களை அள்ளி இவருக்கு நட்சத்திர இயக்குநர் என்கிற அடையாளத்தை பெற்று தந்தது. 

ஜிகிர்தண்டா டபிள் எக்ஸ்: 

ஜிகிர்தண்டா அசுர வெற்றியை தொடர்ந்து எப்போது அதன் பார்ட் 2 வரும் என அனைவரும் வினவி வந்த நேரத்தில், சட்டென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். ஆம், மஹான் படத்துக்கு பிறகு யாரும் எதிர்பாராத மூவ் இது எனலாம். இப்படத்தின் முன்னோட்ட டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் கட்டி போட்டது.

இதில் எஸ் ஜே சூரியா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் தான் கதையின் முக்கிய அம்சங்கள் என சொல்லும் வகையில் மிரட்டியது அந்த டீஸர். சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக், முத்தமிழ் இருவரும் பாடல்களை எழுதுகின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ள நேரத்தில், தற்போது ஷூட்டிங் முற்றிலும் முடிந்து உள்ளதாக அறிவித்து உள்ளது. 

Share this post with your friends