Mnadu News

ஜி பேயில் வந்துள்ள புதிய அம்சம்! பயனர்கள் மகிழ்ச்சி! 

பணம் செலுத்தும் முறை: 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் நிற்க கூட நேரமில்லாமல் ஓடி கொண்டிருக்கிறோம், எந்த ஒன்றையும் விரைவாகவும் மற்றும் எளிதாகவும் முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதன் மனதுக்குள் வேரூறின்றி உள்ளது. இந்த வளர்ச்சியில் ஒன்று தான் UPI பணப் பரிவர்த்தனை முறை. ஆம், சிறு சிறு கடைகள் முதல் மாபெரும் ஷோரூம் வரை எல்லாவற்றிலும் தனது தடத்தை பதித்து உள்ளது UPI பணம் செலுத்தும் முறை. 

மேலும், மற்ற நபரின் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பவும் UPI முறையே பரவலாக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாக்கெட்டில் பணம் எப்போதும் இருக்க வேண்டும் என்கிற விதியை உடைந்துவிட்டது இந்த UPI. ஆனால் ,இந்த முறையில் பணம் அனுப்ப UPI PIN கட்டாயம். இதில் ஒரு சிறு மாற்றம் நிகழ்ந்து உள்ளது. இனி UPI PIN இல்லாமலே பணப் பரிமாற்றம் செய்யலாம். 

UPI LITE என்னும் பின்னில்லா பரிவர்த்தனை: 

ஆம். Google Pay நிறுவனம் “UPI LITE” என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.  இதன் மூலம் UPI PIN உபயோகிக்காமல் பயனர்கள் வேகமாகவும் ஒரே கிளிக்கில் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். UPI LITE கணக்கில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ₹2,000 வரை ஏற்றலாம். மேலும் பயனர்கள் ₹200 வரை உடனடி UPI பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

UPI LITE ஆக்டிவேட் செய்யும் முறை: 

G Pay பயனர்கள் தங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் சென்று “Activate UPI LITE” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு இணைக்கும் செயல்முறை முடிந்ததும், பயனர்கள் தங்கள் UPI LITE கணக்கில் ₹ 2,000 வரை பணத்தைச் சேர்க்க முடியும், ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்பு ₹4,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையை முடிக்க, பயனர்கள் “Pay PIN-Free” என்பதை தேர்வு செய்ய வேண்டும். தற்போது, சுமார் 15 வங்கிகள் UPI LITE முறையை ஆதரிக்கின்றன, மேலும் பல வங்கிகள் வர உள்ள காலங்களில் இந்த முறையை கொண்டு வரும் என கருதப்படுகிறது. 

Share this post with your friends