Mnadu News

ஜி20 மாநாட்டில் புதின் பங்கேற்கவில்லை.

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலியில் வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என்று இந்தோனேசியாவில் உள்ள ரஷிய தூதரகத்தின் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்
அதே சமயம் ரஷிய தரப்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தலைமையிலான குழுவினர் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends