Mnadu News

ஜூலை 4ல் இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபர் பங்கேற்பு.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில், 2017ஆம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. சுழற்சி முறையில் இந்த அமைப்பின் மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது.இந்த அமைப்பின் 23வது மாநாடு வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வீடியோ கான்பரன்சிங் முறையில் பங்கேற்று முக்கிய உரை ஆற்றுவார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஜின்பிங் பங்கேற்பது குறித்து அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Share this post with your friends