கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க, மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டதும், 45 நாட்கள் அந்த மாநிலத்தில் பணியாற்றிய , வாக்குப்பதிவு முடிந்த பின், சென்னை திரும்பியவுடன் பேசியுள்ள அண்ணாமலை,இனி, தமிழக அரசியல் தான் முக்கியம். ‘தி.மு.க., பைல்ஸ்’ என்ற பெயரில், தி.மு.க.,வினர் சொத்து பட்டியல் மற்றும் முதல் அமைச்சர் தொடர்பான ஊழல் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், வழக்குரைஞர் ‘நோட்டீஸ்’ அனுப்பி மிரட்டி பார்க்கின்றனர். இதற்கு இந்த அண்ணாமலையும் பயப்பட மாட்டான்; பா.ஜ.க,வும் பயப்படாது. முதல் அமைச்சர் ஸ்டாலின், என் மீது நேரடியாக அவதூறு வழக்கு போட்டுள்ளார்; அதை வரவேற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.வரும் ஜூலை 9 ஆம் தேதி துவங்கும், ‘என் மண்; என் மக்கள்’ என்ற பாதயாத்திரை, டிசம்பரில் முடியும். பாதயாத்திரையின் போது, தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்படும். இந்த பாதயாத்திரை வாயிலாக, அனைத்து மாவட்ட மக்களையும் சந்திக்க இருக்கிறேன். என்று கூறி உள்ளார்.

முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை: எம்.பி., எம்.எல்.ஏ. நீதிமன்றம் உத்தரவு.
காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம்...
Read More