Mnadu News

ஜூஸ் என்று நினைத்து பூச்சி மருந்தை அருந்தி 3 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு

 

கோவையில் உள்ள காந்திமா பகுதியில் வசித்து வந்த கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவற்றின் மூன்று வயது மகள் ரித்திகா ஸ்ரீ . வீட்டில் கரையான் தொந்தரவு போக்குவதற்காக பயன்படுத்திய கரையான் மருந்து பாட்டிலை ஜூஸ் என நினைத்து
அவரது மகள் குடித்து விட்டார் . இதில் மயங்கி விழுந்த குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனலிக்காமல் ரித்திகா ஸ்ரீ இறந்தாள்.இதனால் அந்த பகுதியே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Share this post with your friends