Mnadu News

ஜெகந்நாதர் கோயிலுக்கு 2 கி.மீ. நடந்து சென்றார் திரௌபதி முர்மு.

நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்த மாநிலத்துக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் திரௌபதி முர்முவை அரசியல்கட்சித் தலைவர்களும், மக்களும் திரளாக வந்து வரவேற்றனர். தனது ஒடிசா பயணத்தை, ஜெகந்நாதர் கோயிலில் சுவாமி தரிசனத்துடன் முர்மு தொடங்குகிறார். இதனை முன்னிட்டு, புரியிலிருந்து கோயிலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த திரௌபதி முர்மு, கோயிலுக்கு 2 கிலோ மீட்டர் முன்னதாகவே காரை நிறுத்தச் சொல்லி, அதிலிருந்து இறங்கி, நடந்தர் அப்போது ,வழியில், அவரைக் காண கூடியிருந்த மக்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டும், மாணவ, மாணவிகளுடன் பேசியபடியும் அவர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று கோயிலை அடைந்தார்.பின்னர் ஜெகநாதரை தரிசித்தார். மத்திய இணையமைச்சர் தர்மேந்திர பிரதானும் குடியரசுத் தலைவருடன் கோயிலில் வழிபாடு நடத்தினார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, புரி ஜெகந்நாதர் கோயில் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Share this post with your friends